protest inauguratedby orajagopal - 2026

சபரிமலை விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் நடத்தப் பட்ட போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறைகளில் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன

திருச்சூர் அருகே மதனப்பள்ளி என்ற இடத்தில் கணேச மங்கலம் பகுதியில் எஸ்டிபிஐ sdpi அமைப்பினர் தாக்கியதில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்

சபரிமலை விவகாரத்தில் போராட்டமானது வன்முறையாக பல இடங்களில் மாறியுள்ளது. எர்ணாகுளம் பகுதியில் அங்கிருக்கும் கடைகளை அடைக்க சொல்லி போராட்டக்காரர்கள் கட்டாயப் படுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் அங்கிருந்த சிலருக்கும் கைகலப்பு மூண்டது. உல்லூர் கலமசேரி ஆலுவா ஆகிய இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

இதனிடையே திருவனந்தபுரம் பகுதியில் ஊடகத்தின் கேமராமேன் ஒருவர் பாஜகவினர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின! எர்ணாகுளம் கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸ்டாண்டில் பயணிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர். பேருந்துகள் ஓடாததால் பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவித்தனர்

protest inaugurated - 2026

மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜக ஆர்எஸ்எஸ் ஆகியவையே காரணம் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்தார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

பொன்னானி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயமடைந்தனர். மணியம் கோடு பகுதியில் உள்ள ஈ.கே.நாயனார் நினைவு அலுவலக கட்டிடம் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டது

களமசேரி பகுதியில், போலீசார் போராட்டக்காரர்கள் 56 பேரை கலவரத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்தனர் அவர்களில் பெண்களும் அடக்கம்.

கேரளத்தில் இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தால் தமிழகம் கேரளா இடையே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பேருந்துகள் எதுவும் ஓடவில்லை! கடையடைப்பு போராட்டம் மற்றும் வன்முறைகளில் பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்!

முன்னதாக இன்று காலை இந்த போராட்டங்களை பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் கலூர் ஜங்ஷன் அருகில் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending