ஜிஎஸ்டி., மேலும்.. மேலும்… சலுகைகள்..! அறிவித்தார் அருண்ஜேட்லி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
02 July25 Arun Jetly - 2026

32 ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்றது

இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான ஆண்டு உச்சவரம்பு 20 லட்சமாக இருந்தது இப்பொழுது இருமடங்காக 40 லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது

முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அருண்ஜேட்லி குறிப்பிட்டபோது இது 50 லட்சமாக உயரக்கூடும் என்று தெரிவித்தார். ஆனால் தற்போது 40 லட்சம் உச்சவரம்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மாநிலங்கள் இந்த உச்சவரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது! மாநிலங்கள் விரும்பினால் 20 லட்சம் என்ற உச்ச வரம்பை 40 லட்சமாக அல்லது 20 லட்சமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்

வரி செலுத்தும் விதத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது காலாண்டு அடிப்படையில் செலுத்தலாம். வருடந்தோறும் ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ரியல் எஸ்டேட் ஜிஎஸ்டி தொடர்பாக நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி கூறினார் அந்த குழுவின் அறிக்கையை பொறுத்து ரியல் எஸ்டேட் ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது

எனவே இன்றைய கூட்டத்தின் முடிவுகள் படி… ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20லட்சத்திலிருந்து ரூ.40லட்சமாக அதிகரிப்பு.

சேவைத்துறையினருக்கும் இனி தொகுப்பு சலுகை திட்டம் விரிவாக்கப்படுகிறது.

ஜிஎஸ்டிதொகுப்பு சலுகை(காம்போசிஷன் ஸ்கீம்)பெறுவதற்கான வரம்பு ரூ.1கோடியிலிருந்து ரூ.1.5கோடியாக உயர்வு –

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.