‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…! 5 பேர் படுகாயம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை லைஃப் ஸ்டைல்
ajith cutout - 2026

திருக்கோவிலூரில் இன்று காலை அஜித் படத்தைப் பார்ப்பதற்காக வந்த ரசிகர்கள், கட் அவுட் சரிந்து விழுந்ததால் தல தெறிக்க ஓடினர்.

சீனிவாசா திரையரங்கம் முன் வைக்கப் பட்டிருந்த 15 அடி உயர அஜித் கட் அவுட் மீது ரசிகர்கள் ஏறி மாலை போட்டனர். ஓரிருவர் மேலே நின்றபடி பால் அபிஷேகம் செய்தனர். ஏற்கெனவே மேலே சிலர் நின்று கொண்டிருந்த போது, மேலும் சிலர் ஏற முயன்றனர். இதனால் பாரம் தாங்காமல் கட் அவுட் சரிந்து விழுந்தது.

இதில் ரசிகர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.