அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குரும்பூரில் அரசின் கஜா நிவாரண பொருள்வேண்டி பொதுமக்கள் மறியல் செய்தனர். அறந்தாங்கி பகுதியில் கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் தாக்கியது.இதில் பாதிக்கப்பட்டவர்கள் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குரும்பூரில் குரும்பூரை சுற்றியுள்ள பல கிராம மக்கள் எங்கள் ஊரில் சிலருக்கு பொருள் அரசு வழங்கியுள்ளது எங்களுக்கு இன்னும் வரவில்லை எங்களுக்கும் வேண்டும் என்று காரணம் காட்டி மறியல் செய்தனர்.இது பற்றி தகவல் தெரிந்தவுடன் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சமரசம் செய்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர்.இதனால் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் மறியல் நடந்த நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




