ஊழலுக்கு எதிராக நான் எடுக்கும் நடவடிக்கை சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தும். மக்கள் பணத்தை அபகரிக்க விடாமல் நான் தடுப்பதால் சிலர் கோபம் அடைகின்றனர் என்று பிரதமர் மோடி பேசினார் #PMModi

modi speech - 2026

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணி இந்திய மக்களுக்கு எதிரானது என்று கூறியுள்ள பிரதமர் மோடி, மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்ததாலேயே எதிர்க்கட்சியினர் ஆத்திரம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.

குஜராத் – மகாராஷ்டிரா எல்லையை ஒட்டி அமைந்துள்ள சில்வாசா நகரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

பின்னர் அங்கே நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர், ஊழலுக்கு எதிராக நான் எடுக்கும் நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமூட்டி இருக்கிறது. பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்தததால், அவர்கள் கோபமடைந்தது இயல்பானதுதான்!.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளனர். அந்தக் கூட்டணி எனக்கு எதிரானது இல்லை, இந்திய மக்களுக்கு எதிரானது!

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

எதிர்க்கட்சிகளின் கூட்டணி முறையானது அல்ல! இப்போதே தங்களுக்குரிய பங்குகளைக் கேட்டு பேரம் பேசத் தொடங்கி விட்டார்கள்… என்று கூறினார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending