கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சம்ஸ்க்ருத துதிப்பாடல்கள் மதத் திணிப்பா?!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
06 July17 Supreme Court - 2026

“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலையில் சம்ஸ்க்ருத – ஹிந்தி துதிப்பாடல்கள் பாடுவது மத திணிப்பு. அதை தடை செய்ய வேண்டும்” என்ற வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் இன்று…

நீதிபதி நரிமன்: “அசதோமா சத்கமய” என்ற துதி உபநிஷத்திலிருந்து எடுக்க பட்டது (அதை எப்படி பாடலாம்?).

அரசு சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: “உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதால் மட்டும் அது மத போதனை ஆகிவிடாது. ‘அசதோமா சத்கமய (அறியாமையிலிருந்து என்னை உண்மையை நோக்கி வழிநடத்து)’ என்பது அனைத்து நூல்களாலும், மதங்களாலும், பாதைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய உண்மையாகும். கிறிஸ்தவ பள்ளிகளில் ‘நேர்மையே சிறந்த கொள்கை’ (Honesty is the best policy) என்று சொல்லித் தந்தால் அது (கிறிஸ்தவ) மத போதனை ஆகிவிடாது. ஒவ்வொரு நீதிபதியின் பின்னும், யதோ தர்மஸ்ததோ ஜய: (எங்கே நீதி இருக்கிறதோ அங்கே வெற்றி இருக்கும்) என்று எழுதப்பட்டிருக்கும் வாசகம் பகவத் கீதையிலிருந்து எடுக்கப்பட்டது. இதில் மதவாதமோ இனவாதமோ கிடையாது”

நீதிபதி நரிமன்: “இந்த வழக்கை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற உத்தரவிடுகிறேன்”.

அரசு சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு பாராட்டுகள்! ????????

இரானில் அமைதிமார்க்கத்தால் துரத்தி இந்தியாவில் தஞ்சம் புகுந்த பார்சி இனத்தை சேர்ந்தவர் நரிமன் என்று நினைவு. பார்சிகளுக்கு இடம் கொடுத்த நம் முன்னோர், ‘அசதோமா சத்கமய’, ‘லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து’ என்றெல்லாம் படித்து வந்ததால் தான் பார்சி, யூத, சிரியன் கிறிஸ்ட்டியன் என அனைவருக்கும் இடம் கொடுத்தார்கள். இன்று… ஒண்ட வந்த பிடாரிகள் ஊர்ப்பிடாரியை விரட்டப்பார்க்கின்றன.

– திருவள்ளுவரின், “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” குறளை படித்திருந்தால், அதிலிருக்கும் மெய்ப்பொருளை மட்டும் எடுத்துக் கொள்வது தெரியாமல் பல பஞ்சாயத்து தலைவர்கள்… கொடுமை.

– செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.