இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் வணிகம்
budget parliament - 2026

புது தில்லி: மத்திய அரசின் 6வது மற்றும் கடைசி பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் பொறுபுப் வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து வருகிறார்.

பிப்.1 இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை நிகழ்த்தத் தொடங்கினார் பியூஷ் கோயல். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகள் கடுமையாக கோஷம் எழுப்பின. அந்த இரைச்சலினூடே தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார் பியூஷ் கோயல்.

piyushgoel - 2026

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இந்தியா முன்னேற்றப்பாதையில் செல்கிறது. மக்களின் கனவுகளை நனவாக்க மத்திய பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய பொருளாதாரா நாடாக உலக அளவில் இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது

  • நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட் உரையில் தொடர்ந்து அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வருகிறார்!

வங்கி துறை சீர்திருத்தங்கள் சிறந்த பலனை தரத் தொடங்கியுள்ளன

வராக்கடனை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளோம்

மோடியின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

2020 – க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு

ஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறோம்

அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடக்கிறது

பினாமி சட்டம், ரியல் எஸ்டேட் தொழிலை சுத்தப்படுத்தியுள்ளது

பொருளாதார குற்றவாளிகளை கைது செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளோம்

மத்திய அரசு சொன்னபடியே நடந்து வருகிறது

மத்திய அரசு பண வீக்கத்தை 4.4 சதவீதமாக கட்டுக்குள் வைத்துள்ளது

பணவீக்கம் அதிகரித்திருந்தால் மக்கள் செலவீனம் 40% வரை அதிகரித்திருக்கும்

விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்

அனைவருக்கு வீடு, கழிப்பறை, மின்சாரம் ஆகியவற்றை 2022-ம் ஆண்டுக்குள் வழங்க மத்திய அரசு திட்டம்

இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது

இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் இருந்தது. அதை வெற்றிகரமாக சமாளித்தோம்

அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது

வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்

மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்

அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது

தவறு செய்த தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

தூய்மை இந்தியா திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது

98% கிராமங்களில் சுகாதாரம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது

5.45 லட்சம் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.