பிஆர்ஓ குஷ்பு இங்கிருக்க… இம்ரானுக்கு அங்கே கவலை எதற்கு?

Published:

kushboo - 2026

மோடி பேரைச் சொல்லி ஓட்டு வாங்கிய இம்ரான் இப்போது பாடம் கற்றுக் கொடுக்கிறார் என்கிறார் ‘குஷ்பு’!

பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் பேசிய அந்நாட்டுப் பிரதமர்
இம்ரான் கான், ”அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார்” என்று அறிவித்தார்.

kushbu - 2026

இதற்கு, காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவாளர்களும் டிவிட்டர் பதிவுகளிலும் அறிக்கைகளிலும் இம்ரான் கானை புகழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகள் இட்டுள்ளார்… அவற்றில்…

“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் உள்ளதா? நம் பிரதமருக்கு ஒரு பாடம் அவசியம்” என்று  ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு ட்வீட்டில், “விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களே நீங்கள் தாய்நாடு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இம்ரான் கானின் அன்பான செய்கைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் இவரது டிவீட்ட்க்கு இன்று பலத்த எதிர்ப்பும் சர்ச்சையும் கிளம்பியது. யார் யாரிடம் பாடம் கற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர் பலர்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

பாகிஸ்தானில் பிரசாரம் மேற்கொண்டிருந்த இம்ரான் கான், தாமும் இந்தியாவில் பிரதமர் மோடி எவ்வாறு ஆட்சி செய்கிறாரோ அவ்வாறு கட்டுக் கோப்புடன் ஆட்சி செய்வேன் என்று சொல்லித்தான் ஓட்டுகேட்டார். அவர் ராகுலைச் சொல்லியோ, காங்கிரஸ் ஆட்சிகளைச் சொல்லியோ ஓட்டு கேட்கவில்லை என்று பதில் அளித்துள்ளனர் சிலர்.

அதே நேரம், குஷ்புவும் விதவிதமாக பதில் கொடுத்து டிவிட்டர் பதிவுகளில் இன்றைய முழு நேரத்தையும் போக்கிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட தாக்குதல்களும் அதில் அதிகம்!

இருப்பினும், குஷ்பு ஒன்றை மறந்து விட்டார். அவருக்கு கொள்கைக்கும் கொள்ளைக்கும் வேறுபாடு தெரியாது என்பதால், இதனை அவருக்கு நாம் நினைவூட்டுகிறோம் என்று குறிப்பிட்டு, சிலர் பேஸ்புக் சமூகத் தளத்தில் பதில் அளித்திருக்கிறார்கள். அதில்…

காங்கிரஸ் ஆட்சியில் இந்திய ராணுவ வீரரின் முகத்தை சிதைத்து தலையை துண்டித்த பாக்கிஸ்தான் ராணுவம் இப்போது இரண்டாவது நாளே இந்திய வீரரை விடுவிப்பதாக அறிவிக்கிறது என்றால்.. அந்த பெருமை யாருக்கு? யார் யாரிடம் பாடம் படிக்க வேண்டும்? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இந்த மீம்ஸ் குஷ்புவுக்காக சமர்ப்பிக்கப் படுவதாக ஒருவர் கூறியிருக்கிறார். அது…

vadivel modi - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img