ஒரு கோடி பேருடன் பேச்சு! பாஜக.,வினருடன் மோடி என்ன பேசினார்?!

Published:

modi app - 2026

உலகின் மிகப்பெரிய வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடல் என்று கூறும் வகையில், ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தில்லியில் இருந்தபடி காணொளிக் காட்சி மூலம் பாஜக தொண்டர்களுடன் உரையாடினார் மோடி.

அப்போது அவர், மாநில வாரியாக பாஜக., தொண்டர்களுடன் உற்சாகமாக உரையாடினார். அவரது உரையாடல் அவரது டிவிட்டர் பக்கத்திலும் பாஜக.,வின் அதிகாரபூர்வ பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களிலும் லைவ்வாக காட்சிப் படுத்தப் பட்டன.

அபபோது பேசிய மோடி,. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக, பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதோடு, இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கோடு, தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றுவதாகவும், நமது பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதுதான் எதிரிகளின் நோக்கம் என்றார்.

இந்திய மக்கள் அனைவரும் மலைபோல் உறுதியாக நின்று, எதிரியின் திட்டங்களை தவிடுபொடியாக்குவார்கள்

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

இந்தியா ஒன்றாக வாழும், இந்தியா ஒன்றாக வளரும், ஒன்றாக போராடி ஒற்றுமையாக வெற்றிபெறும்

இந்திய ராணுவத்தின் மீதும் படைகள் மீதும் முழுநம்பிக்கை இருக்கிறது.

நமது வலிமையை உறுதிப்படுத்தும் வகையில் வீரர்களுக்கு தோளோடு தோள் நிற்போம்

எதிரியின் நோக்கங்கள் எத்தகையதாக இருப்பினும் நமது பணியோ முன்னேற்றமோ தடைபடாது

என்றார் பிரதமர்

Related articles

Recent articles

spot_img