மனைவிக்கு கள்ளத் தொடர்பு! பிரிந்தது அதனால்தான்!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

balaji actor - 2026

மனைவியின் கள்ளத் தொடர்பு தனக்கு தெரியவந்த காரணத்தாலேயே தாம் மனைவியை விட்டுப் பிரிந்ததாக தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

தன்னுடைய மனைவி நித்யாவுக்கும் பைசல் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு
ஏற்பட்டதால்தான் தான் மனைவியை விட்டுப் பிரிந்ததாக நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் என்பவர் இந்த வழக்கில் தலையிட்டு தன் மனைவியையும், தன்னையும் மிரட்டுவதாகக் கூறினார்.

உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மற்றும் பைசல் மீது நடவடிக்கை எடுப்பதற்கான
முயற்சிகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தன் மகளின் வாழ்க்கை நல்லபடியாக அமைய போர்டிங் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்க விரும்புவதாகக் கூறினார் தாடி பாலாஜி.

மேலும்,  தனது மனைவி எப்போது வேண்டுமானாலும் தனது மகளை போர்டிங் ஸ்கூலில் சென்று பார்க்கலாம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.