இந்தியாவுக்கு எதிராக எஃப்-16: பாகிஸ்தானிடம் விசாரணை நடத்தும் அமெரிக்கா!

Published:

f16 pakistan - 2026

பயங்கர வாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவோம் என்ற உறுதி மொழியின் பேரில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எஃப்-16 விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இந் நிலையில் இதுகுறித்து பாகிஸ்தானிடம் விசாரணை நடத்துகிறது அமெரிக்கா!

கடந்த பிப்.26 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதில் ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத முகாம் முற்றிலும் தகர்க்கப் பட்டது. இதனால் பழி வாங்கவும், பாகிஸ்தான் போருக்கு அஞ்சாத நாடு என்பதை நிரூபிக்கவும் பதிலடி தருவதற்காக, பாகிஸ்தானின் விமானங்கள் பிப்.27ம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவி, குண்டுகளைப் போட்டன. இந்த குண்டுகள் இந்திய ராணுவத்தினரை குறிபார்த்தும், பொதுமக்கள் இருக்கும் இடங்களிலும் விழுந்தன.

குறிப்பாக, பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்-16 வகை போர் விமானங்கள் காஷ்மீரின் ரஜவுரி பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயன்றன. அந்த விமானங்களை இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் விரட்டின. அப்போது பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு இந்திய எல்லையிலேயே விழுந்தது.

pak aircraft f16 - 2026

இந்த வான் தாக்குதலின் போது, பாகிஸ்தான் போர் விமானங்களை அவர்கள் நாட்டு எல்லைக்கே துரத்திச் சென்று இந்திய போர் விமானங்கள் போரிட்டன. அப்போது, இந்திய விமானி அபிநந்தன் இந்தியாவின் மிகப் பழைய மிக்-21 ரக விமானத்தில் துரத்திச் சென்று, பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை விரட்டினார். அப்போது மற்றொரு பாகிஸ்தான் போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கி, அபிநந்தன் சென்ற மிக்-21 ரக விமானம் கோளாறு ஏற்பட்டது. முன்னதாக, அவர் தாக்கிய ஏவுகணையால் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதாகத் தெரிய வந்தது. இந்நிலையில், தான் சென்ற விமானம் பழுதடைந்த நிலையில், அந்த விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்து அபிநந்தன் உயிர் தப்பினார். ஆனால் அவர் தரையிறங்கிய இடம் பாகிஸ்தான் எல்லை என்பதால், பாகிஸ்தான் ராணுவம் அவரை சிறைபிடித்தது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

பின்னர் இந்தியப் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால், அமெரிக்கா ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர, அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தது.

plane war - 2026

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, இந்திய நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கிய எஃப்-16 விமானங்கள் என தகவல் வெளியானது. இதற்கு, சுட்டு வீழ்த்தப் பட்ட விமானத்தின் பாகங்கள் உறுதி செய்தன. ஆனால், அமெரிக்கா இந்த விமானங்களை பாகிஸ்தானுக்குக் கொடுக்கும் போது, இந்த விமானங்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இந்தியா மீதான தாக்குதலுக்கோ வேறு விவகாரங்களுக்கோ பயன்படுத்தக் கூடாது என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்ட பின்னரே இவை அந்நாட்டுக்கு வழங்கப் பட்டனவாம்.

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”42″ order=”desc”]

ஆனால் அந்த விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளதற்கான ஆதாரங்களை இந்திய விமானப்படை திரட்டியுள்ளதும், இவற்றை முப்படை தளபதிகளும் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது விளக்கியுள்ளதும் அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இருப்பினும், தாங்கள் எஃப்-16 விமானத்தை இந்திய தாகுதலில் பயன்படுத்த வில்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால், எஃப்-16 விமானங்களின் எலெக்ட்ரானிக் சிக்னல்கள் இந்திய விமானப் படை ரேடாரில் பதிவாகியுள்ளதாகவும், அவை குறித்த விவரங்களை அமெரிக்கா வசம் ஒப்படைப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது.

இந்நிலையில், எஃப் 16 விமானம் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகக் கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோன் பாக்னர், இது உண்மை என்றால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”5″ tax_term=”2″]

Related articles

Recent articles

spot_img