பயங்கரவாதிகளுக்கும் ‘ஜி’ போட்டு மரியாதை தரும் ஒரே கட்சி காங்கிரஸே!

Published:

rahulgandhi - 2026

பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். ஏனென்றால் அவர்களை நம்பித்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.

அன்று  அப்சல் குரு ஜி என்று மரியாதையுடன் அழைத்தார் ரன்தீப் ப்ரஸ்கோன்வாலா
நேற்று: ஹஃபீஸ் சய்யீத் சஹாப் என்றார் காங்கிரசின் திக்விஜய் சிங்.
இன்று: ‘மசூத் அசார் ஜீ’ என்று அழைக்கிறார் ராகுல் காந்தி.

இன்று இணையத்தில் இந்த வீடியோதான் பிரபலமாகியிருக்கிறது. பாஜக., தலைவர்கள் பலரும் ராகுலின் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக ஸ்மிருதி இரானி இதனைத் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு கமெண்ட் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் ராகுலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

இருவருமே பயங்கரவாதிகளை நேசிக்கிறார்கள்! – என்று கருத்துப் பதிவு செய்திருக்கிறார் ஸ்மிருதி இரானி.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுகுறித்து கருத்து தெரிவித்த போது தேசம் ராகுல் காந்தி பயங்கரவாதி மசூத் அசாருக்கு மரியாதை கொடுத்து விளித்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

பயங்கரவாதிகளால் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கும் மக்களுக்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்தவர்களுக்கும் ராகுல்காந்தி என்ன சொல்ல வருகிறார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்! அந்த பயங்கரவாதிக்கு அவ்வளவு அதிகமான மரியாதை கொடுத்து பேசுவதன் காரணம் என்ன? ஏன் அவர் ராணுவ தலைவரை குண்டர் என்று குறிப்பிட்டுவிட்டு பயங்கரவாதிக்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத்தார் என்று ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்!

ராகுல் காந்தி தில்லியில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய போது கந்தகாருக்கு விமானத்தை கடத்தி சென்ற தலிபான்கள் மசூத் அசாரை விடுவிப்பதற்காக பேரம் பேசியபோது, அஜித் தோவல்தான் அசாரைக் கொண்டு சென்று விடுவித்தார்! இது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, அப்போது மசூத் அசார் ஜி என்றும் மரியாதை கொடுத்து பேசியதைக் கேட்டு நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது!

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img