கேரளாவில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு திட்டமிட்ட இளைஞர் கைது!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

nia office - 2026

கேரளாவின் தற்கொலைப் படை தாக்குதலுக்கு திட்டமிட்ட இளைஞரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலக்காட்டைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ரியாஸ் என்னும் அபூபக்கர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த 15 இளைஞர்கள் காணாமல் போய் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது!

ஐஎஸ்ஐஎஸ் காசர்கோடு வழக்கில் இவருக்கு தொடர்பு உண்டு என்று கூறப் படுகிறது. இலங்கை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜஹ்ரானின் வீடியோ மற்றும் பேச்சுக்களை தொடர்ந்து ரியாஸ் பார்த்து வந்துள்ளதாக தெரிகிறது

ரியாஸிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு சமூக வலைதளங்களில் ஆடியோவை பரப்பிய அப்துல் ரஷீத் அப்துல்லாவுடன் ஆன்லைனில் தொடர்பிலேயே இருந்துள்ளார்

அதேபோல் கண்ணூர் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்துல் கையூம் என்கிற அபு காலித் உடன் ஆன்லைன் தொடர்பில் இருந்துள்ளார்! இவர் ஜஹ்ரான் ஹசீம்  மற்றும் ஜாகிர் நாயக் ஆகியோரின் பேச்சுக்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, ரியாஸ்  கேரளாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை காசர்கோட்டில் இரண்டு பகுதிகளிலும் பாலக்காட்டிலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 4 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்

ரியாஸ் அபுபக்கர் கொச்சி என்.ஐ. ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் மற்ற மூவரிடமும் ஐஎஸ் தொடர்பு மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் திட்டங்கள் இவை குறித்து தேசிய் புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.