கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்று… ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த பெண் டாக்டர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Doctor from Andhra Pradesh drowns in Goa while attempting - 2026

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டரை ராட்ச அலை இழுத்து சென்றதில் அவர் உயிரிழந்தார்.

கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் ரம்யா கிருஷ்ணா. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் இவர். இவர், நேற்று மாலை கடற்கரைக்கு வழக்கம் போல் அழகை ரசிப்பதற்காகச் சென்றார்.

அப்போது கடல் பகுதியையும் மாலை நேர சூரியன் மறைவையும் சேர்த்து அழகான செல்பியாக எடுக்க முயன்றார். அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்று அதையே பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென எழுந்த ராட்சத அலையை அவர் கவனிக்கவில்லை.ap lady doctor - 2026

இந்நிலையில்,ராட்சத அலைகள் அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் போராடி மீட்டனர்.

அவருடைய உடன் அவரது சொந்த ஊரான ஜக்கையாபேட்டைக்கு இன்று காலை அவருடைய சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ரம்யா கிருஷ்ணாவின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் அந்த ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.