தில்லி சந்திப்புகள் ‘கட்’; லக்னோவில் அகிலேஷுடன் சந்திப்பு: மாயாவதி அடித்த அந்தர் பல்டி!

mayavati akilesh - 2026

தில்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி திடீர் பல்டி அடித்துள்ளது.  தில்லியில் இன்று ராகுல், சோனியாவை மாயாவதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டது பகுஜன் சமாஜ் கட்சி!

தேர்தலுக் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் பகுஜன் சமாஜ் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து  தில்லி சந்திப்பு எதுவும் இல்லை என்று ரத்து செய்துவிட்டு, லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார் மாயாவதி.

பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்து உ.பி.யில் தேர்தலை சந்தித்தது இந்த முறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரம வைரிகளாகக் கருதும் இருகட்சிகளும் ஒரே மேடையில் நின்றதும், அகிலேஷின் தந்தை முலாயம் திக்கித் திணறி, வேண்டாவெறுப்பாக கைகோத்ததும் அரசியல் வானில் அதிசயமாகப் பார்க்கப் பட்டது.

மகா கட்பந்தன் என்று பெரும் கூட்டணிக்கு திட்டமிட்டு தேர்தலை சந்தித்தன இரு கட்சிகளும். காங்கிரஸின் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுத்து, காங்கிரஸ் கட்சியை கூட்டணி சேர்க்காமல் கழற்றி விட்டன. எப்படியும் 30 க்கும் மேற்பட்ட இடங்களை இரு கட்சிகளும் தனித்தனியாகப் பிடிக்கும் பட்சத்தில், பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் மாயாவதி இருந்ததும், அது தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில் தகர்ந்து போனதும் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

லக்னோவில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவரும் சந்தித்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, 1977ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்றத்தை போல, வாரணாசியில் பிரதமர் மோடி தோற்க வேண்டும் என மாயாவதி கடும் சாபத்தைக் கொடுத்தார். அவர் தனது  டுவிட்டர் பதிவில்,  குஜராத்தின் வளர்ச்சியைப் போல, உ.பி.,யின் கிழக்கு பகுதியில் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட  பிரச்னைகள் நீக்கப்படவில்லை. அங்கு எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றாமல், மக்களை, யோகி ஆதித்யநாத்தும், நரேந்திர மோடியும் ஏமாற்றிவிட்டனர்.

கோரக்பூர் தொகுதியில் யோகியை மக்கள் நிராகரித்தனர். மோடியின் வெற்றியைவிட, அவரது தோல்வி வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். 1977-ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்கடிக்கப்பட்டார். அதுபோல் இப்போது வாரணாசி தொகுதியில் மீண்டும் நிகழுமா?

மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து, வகுப்புவாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய மாநில அரசுகள் தூண்டி
விடுகின்றன.. என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மாயாவதி, தில்லியில் சோனியா மற்றும் ராகுலை சந்திக்க உள்ளதாகக் கூறப் பட்டது.  ஆனால் தற்போது அந்த முடிவை மாயாவதி கைவிட்டுவிட்டார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories