இது போன்ற பொதுநல மனுக்கள் பெரும் தொல்லை! உச்ச நீதிமன்றம் ‘கறார்’!

Published:

06 July17 Supreme Court - 2026

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிடமுடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது தொல்லையாக முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப் பட்டதுடன், இதுபோன்ற பொதுநல மனுக்கள், பெரும் தொல்லை என கருத்துக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் !

தேசம் அதன் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அனுமதிப்போம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தேர்தலில் பதிவான ஓட்டுகளுடன், 100 சதவீதம் விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளையும் சேர்த்து எண்ண வேண்டும் எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில், சில அமைப்புகள் மனு தாக்கல் செய்தன.  இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது போது, மனுக்கள் விசாரிக்க உகந்தவை அல்ல; இது போன்ற மனுக்களை மீண்டும் மீண்டும் அனுமதிக்க முடியாது எனக்கூறினர் நீதிபதிகள்!

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img