உ.பி.யில் அதிர்ச்சி! ​ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை!

Published:

smriti close aid surendrasingh - 2026

காங்கிரஸ் தலைவர் ராகுல் தோல்வி அடைந்த அமேதி தொகுதியில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக.,வைச் சேர்ந்த ஸ்மிருதி இரானியின் நெருங்கிய உதவியாளர் நேற்று இரவு சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உபி மாநிலம் அமேதியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக., சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுலை வீழ்த்தி கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.

ஸ்மிருதி இரானி ராகுலைத் தோல்வி அடையச் செய்ததால் அவருக்கு தற்போது கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஸ்மிருதி இரானிக்கு உதவியாளராக இருந்து சிறப்பாக பணியாற்றிய சுரேந்திர சிங், சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

சுரேந்திர சிங், ஜாமோ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரௌலியா கிராமத்தின் கிராமத் தலைவராக இருந்தவர். அண்மையில் பரௌலியா கிராமம், ஒரு செய்தியின் மூலம் தேசிய அளவில் கவனத்தைக் கவர்ந்தது. சுரேந்திர சிங், ஏராளமான காலணிகளை தனது கிராமம் மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள மக்களுக்கு வழங்கியுள்ளார். ஆனால், இதனைக் குறிப்பிட்ட பிரியங்கா, ராகுலை அவமதிப்பதற்காகவே ஸ்மிருதி இரானி இவ்வாறு காலணிகளை கிராம மக்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டார். இது தேசிய அளவில் பெரிய செய்தியானது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இந்நிலையில், மர்மநபர்களால் சுடப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இருந்தவரை உடனடியாக லக்னௌ மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் இது தொடர்பாக இருவரைப் பிடித்து அவர்களிடம் விசாரித்து வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img