
உத்திரமேரூரில் தாய் யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் வாழைத்தோட்ட தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் உடலநலக்குறைவால் இறந்துவிட்டார். மறைந்த லோகநாதனுக்கு சித்ரா (வயது 37) என்ற மனைவியும், சக்திவேல் (17) என்ற மகனும் உள்ளனர்.
லோகநாதன் இறந்த பிறகு தனித்து விடபட்ட சித்ரா செய்வதறியாது திணறியபோது அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது.
இதனால் ஓரளவு கவலைகளை மறந்து நிம்மதியாக வேலைசெய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சித்ரா அடிக்கடி செல்போனில் அதிகநேரம் யாருடனோ பேசிவந்துள்ளார். இது குறித்து மகன் சக்திவேல் கண்டித்துள்ளார். ஆனால் சித்ரா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் செல்போன் உரையாடலை தொடா்ந்துள்ளார். இதனால் தாயுக்கும், மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சித்ரா செல்போனில் யாரிடமோ நீண்ட நேலரம் சிரித்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேல் அவரிடம் சண்டையிட்டதாக தெரிகிறது.
2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இதில் மனமுடைந்த சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சக்திவேலின் உறவினர்கள் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயின் செல்போன் பேச்சால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


