வாராணசியில் பிரதமர் மோதி! காசி விஸ்வநாதரை தரிசித்து சிறப்பு பூஜை!

Published:

modi varanasi temple - 2026வாராணசியில் பிரதமர் நரேந்திர மோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி வரணாசி சென்றுள்ளார். காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுட்ட பிரதமர் மோதி, கட்சித் தொண்டர்களுடனான கூட்டத்திலும் கலந்துகொண்டார். தொடர்ந்து, தனக்கு வாக்களித்த காசி நகர் மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார் மோதி.modi varanasi temple2 - 2026

முன்னதாக இன்று காலை விமானம் மூலம் வாராணசி வந்த பிரதமர் மோதியை பாஜக., தலைவர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோதியின் வாராணசி வருகையை முன்னிட்டு அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

modi vaaranasi - 2026

காசி விஸ்வநாதர் கோவில் அருகே பிரதமர் மோதியை வரவேற்க பல்வேறு வேடங்களை அணிந்த படி மக்கள் பலர் காத்திருந்தனர். அவர் செல்லும் வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு வாழ்த்து முழக்கமிட்டு வருகின்றனர்.

modi varanasi - 2026இந்நிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்ற பிரதமர் மோதி, காசி விஸ்வநாதருக்கு பால் அபிஷேகம் செய்து, தீப ஹாரத்தி காட்டி, சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Related articles

Recent articles

spot_img