நடிகர் விஜய் அப்பா காவி வேட்டி கட்டச் சொல்லி… வீட்டுக்கு பாஜக., நிர்வாகி அனுப்பி வைத்த பார்சல்!

Published:

saffron dhoti parcel - 2026

நடிகர் விஜய் வீட்டுக்கு பாஜக. நிர்வாகி ஒருவர் காவி வேட்டி அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘அரசியலில் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக இருக்கின்றனர். அரசியல்வாதிகள் யாரும் சினிமாவை காப்பாற்றுவதில்லை! சினிமாவை அழிக்கவே அவர்கள் திட்டம் போட்டுள்ளனர். அரசியல்வாதிகள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுடன் கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. மக்களை திரட்டி இதுகுறித்து போராடினால் மட்டுமே அரசுக்கு சொரணை வரும் என்றெல்லாம் ஆவேசமாகப் பேசினார்.

சினிமா தொடர்பான பிரச்னைகளை அப்படியே பேசிவிட்டுச் செல்லாமல், மோடியின் வெற்றி குறித்து கிண்டலும் வருத்தமும் வெளிப்படுத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர். தேர்தல் முடிவுகள் வந்த பின்னர், இப்போது மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப் போவதாக விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் கிறிஸ்துவ அமைப்புகள் பகிரங்கமாகவே மோதிக்கு எதிராக ஜபம் செய்வதாக அறிவித்தன. ஒவ்வொரு ஞாயிறும் மோதி குறித்த அவதூறுகளை மட்டுமே சர்ச்சுகளில் ஏசுவின் பெயரால் பாதிரியார்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். சர்ச்சுகளுக்குச் சென்று வந்த கிறிஸ்துவர்கள் மீது மோடி வெறுப்பு என்ற சாத்தான் ஏறிக் கொண்டான்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

அந்த சாத்தான் பணத்துக்காக கிறிஸ்துவராக மதம் மாறிய எஸ்.ஏ.சந்திரசேகருக் குள்ளும் ஏறிவிட்டார். அந்த சாத்தானை சரி செய்ய வேண்டும் என்றால், எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியது போல், அவர் காவி வேட்டிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று பாஜக.,வினர் வெளிப்படையாக தங்களது சமூக ஊடகங்களில் வெளிப்படையாக ஆக்ரோஷத்துடன் கூறியிருந்தனர்.

saffron dhoti - 2026இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டிற்கு இன்று ஒரு பார்சல் அனுப்பப் பட்டது. பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி என்ற முகவரியில் இருந்து அனுப்பப் பட்ட அந்த பார்சலில் ஒரு கடிதமும் ஒரு காவி வேட்டியும் இருந்தது.

அந்தக் கடிதத்தில், ‘முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பியுள்ளோம். இனி ஒவ்வொரு தவணையாக காவி வேட்டி அனுப்பிக் கொண்டே இருப்போம். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் காவி வேட்டியே அணிய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’ என்று எழுதப்பட்டிருந்தது.

எஸ்.ஏ. சந்திரசேகர்க்கு பதிலடி தரும் விதமாக இன்று பாஜக., திருப்பூர் தெற்கு மாவட்டஇளைஞரணி சார்பாக தாராபுரம் தலைமை அஞ்சலகத்தில் முதல் தவணையாக #காவி வேட்டி அனுப்பட்டது!

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img