தெற்காசியாவிலேயே முதல் முறையாக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து அழிக்கும் கருவி….!

இந்தியா உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

cansar - 2026

புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடிக்கும் கருவி தரமணி அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம்!

உயிர் கொல்லியாக கருதப்பட்டு வரும் புற்றுநோய். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்து நோயிலிருந்து விடுபடவும், நோயாளியை காப்பாற்றும் வகையில் இந்தக் கருவியில் பயோகிராப் விசன் 600 என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

இந்த ஸ்கேன் கருவியின் முடிவுகளும், படங்களும் அதிக துல்லியத்துடன், மிகத் தெளிவாகவும் இருக்கும் என்பதால், மிகச்சரியாக சிகிச்சை அளிக்க உதவுவதுடன் . மீண்டும் அந்த நோய் ஏற்படுகிறதா என்பதை கண்டறியும் திறனையும் பெற்றுள்ளது.

இந்த சிடி ஸ்கேன் கருவியின் உதவியால் புற்றுநோய் செல்கள் உள்ள இடத்தை மட்டும் கதிரியக்கம் மூலம் தாக்கி அழிக்க முடியும்.

ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்படாது. புரோட்டான் தெரபி என்ற அதிநவீன கதிரியக்க சிகிச்சை மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த கருவியின் செயல்பாடு மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்நோயிலிருந்து மீட்டெடுக்கப்படுவது உறுதி என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.