பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களுக்கு நிகராக… மோதி பதவியேற்பில் பங்கேற்க அழைப்பு பெற்றவர்கள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

amitshahpollviolence - 2026

தில்லியில் மே 30 ம் தேதி நாளை மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக அழைக்கப் பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மேலும் பல நாடுகளின் தலைவர்களும் விஐபிகளும் பங்கேற்க உள்ளனர். அதற்கு ஈடாக அழைப்பு பெற்றிருப்பவர்கள், ஆச்சரியப் படுத்தும் விதத்தில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸின் வன்முறைக்குப் பலியான பாஜக., நிர்வாகிகளின் குடும்பத்தினர்கள்தான்!

மேற்கு வங்கத்தில் தேர்தல் கலவரத்தில் பலியான பாஜக நிர்வாகிகளுக்கு இந்தத் தேர்தல் வெற்றியை அர்ப்பணிப்பதாக அமித் ஷா கூறியதும், தொடர்ந்து, மோதியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அவர்களின் குடும்பங்களை அழைத்து தொண்டர்களுக்கு ஆச்சரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார் அமித் ஷா.

wb pollviolence - 2026திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் நிர்வாகிகளைக் கொலை செய்ததாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந் நிலையில், பாஜக.,வின் வெற்றிக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினர் 50 பேரை தில்லிக்கு வரவழைத்து மோதி பிரதமராகப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கிறார் அமித் ஷா.
.
இதுகுறித்து, தேர்தல் கலவரத்தில் கொல்லப்பட்ட மிட்னாப்பூர் பகுதி நிர்வாகியின் மகன் மனு ஹன்ஸ்டா கூறுகையில், எனது தந்தை திரிணாமுல் குண்டர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது எங்களை தில்லி அழைத்துச் சென்று உரிய மரியாதை தரவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.