மீண்டும் இந்திய பிரதமராக மோடி இன்று பதவி ஏற்கிறார்

மீண்டும் பிரதமராக மோடி இன்று இரவு பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற் 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாரதீய ஜனதா மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. இதையொட்டி கடந்த 25- ந் தேதி நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மோடி சந்தித்து புதிய ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார். இதை தொடர்ந்து ஆட்சி அமைக்க அவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார்.

ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் கோலாகல விழாவில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். மோடி அமைச்சரவையில் சிவசேனா, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெறுகின்றன.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து மாநில கவர்னர்கள், முதல்-வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநில கட்சிகளின் தலைவர்கள், தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பல தரப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-வர் ஓ.பன்னீர்செல்வம், மேற்கு வங்காள முதல்-வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கர்நாடகா முதல்வர் குமாரசாமி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

பதவியேற்பு விழாவில் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பில் வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் உள்ளன. இது தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருக்கும் கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த்குமார், மியான்மர் அதிபர் யூவின் மையின்ட், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பிக்கோவ், பூடான் பிரதமர் லோட்டே ஸ்ரிங், வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தாய்லாந்து சார்பில் சிறப்பு தூதர் கிரிசாடா பூன்ராச் ஆகியோர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்க மாட்டார் என்று அந்நாடு ஏற்கனவே தெரிவித்து விட்டது. நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழா முடிந்த பிறகு ஜனாதிபதி மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறும். மேலும் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும். சைவம், அசைவம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான விசே‌ஷமான உணவுகள் பரிமாறப்படும். மோடி பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பதிலாக வளாகத்தில் நடைபெறுகிறது. அதிகமான பிரமுகர்கள் பங்கேற்பதால் இங்கு நடக்கிறது. ஜனாதிபதி வளாகத்தில் நடைபெறும் 4-வது பதவியேற்பு நிகழ்ச்சியாகும். பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories