மத்திய அமைச்சராக பதவி ஏற்க உள்ளவர்கள்… மோதி வீட்டு தேநீர் விருந்தில்..!

Published:

modi swearing2 - 2026

மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளவர்கள் பிரதமர் வீட்டிற்கு வருகை தந்தனர். மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களுக்கு பிரதமர் மோதி தனது வீட்டில் தேனீர் விருந்து அளித்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ராம்தாஸ் அத்வாலே ஆகியோரும், வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கரும் பிரதமர் இல்லத்திற்கு வந்திருந்தனர்.

தில்லியில் உள்ள பிரதமர் மோதியின் இல்லத்துக்கு அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் அமித்ஷாவிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

modi swearing - 2026

தேநீர் விருந்திக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று பதவியேற்க உள்ள புதிய அமைச்சர்களின் உத்தேச பட்டியல் என்று ஊடகங்களில் வெளியான விவரம்..
1. ரவி சங்கர் பிரசாத்
2. பியூஷ் கோயல்
3. ஸ்மிருதி இரானி
4. நிர்மலா சீதாராமன்
5. கிரண் ரிஜிஜூ
6. சுஸ்மா சுவராஜ்
7. ராஜ்நாத் சிங்
8. நிதின் கட்காரி
9. தர்மேந்திர பிரதான்
10. ஹர்ஷவர்தன்
11. கிரிஷன் பால் குர்ஜார்
12. ஸ்ரீபத் நாயக்
13. நரேந்திர சிங் தோமர்
14. சுரேஷ் பிரபு
15. ராவ் இந்தர்ஜித் சிங்
16. வி.கே.சிங்
17. அர்ஜூன் ராம் மேக்வால்
18. ராம் விலாஸ் பாஸ்வான்
19. ஹர்சிம்ரத் கவுர்
20. சதானந்த கவுடா
21. பபுல் சுப்ரியோ
22. பிரகாஷ் ஜவடேக்கர்
23. ராமதாஸ் அதுவாலே
24. ஜிதேந்தர் சிங்
25. நிரஞ்சன் ஜோதி
26. தவர் சந்த் கேலட்
27. ரத்தன் லால் கடாரியா
28. ரமேஷ் பொக்ரியல் நிஷன்க்
29. ஆர்சிபி சிங்
30. கிஷன் ரெட்டி
31. சுரேஷ் அங்கடி
32. ரவீந்திரநாத்
33. கைலாஷ் சவுத்ரி
34. பிரல்கத் ஜோஷி
35. சோம் பர்காஷ்
36. ராமேஸ்வர் தேலி
37. சுப்ரத் பதக்
38. திபோஸ்ரீ சவுத்ரி
39. ரிட்டா பகுகுனா ஜோஷி

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

மோதியின் பதவியேற்பு விழா இன்று மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள், தொழிலதிபர்கள் பங்குபெறுகின்றனர். வெளிநாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பதவி ஏற்பதையொட்டி மோடி இன்று காலை 7 மணிக்கு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமித்ஷா, பியூஷ் கோயல், கிரிராஜ் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன் பின்னர் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கான நினைவிடத்தில் கடற்படை, வான்படை, தரைப்படை ஆகிய முப்படைத் தலைவர்கள் உடன் இருக்க வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

Related articles

Recent articles

spot_img