தென்மேற்கு பருவமழை ஜூன் 6ல் தொடங்கும்!

Published:

04 07Nov Dhin Rain forecast - 2026

புது தில்லி : நாட்டின் தெற்கு கடலோர பகுதிகளில் ஜூன் 6 ம் தேதி தென்கேற்குப் பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து அளித்த தகவலில், தற்போது தெற்கு அரபிக்கடல், தென்மேற்கு-தென்கிழக்கு-கிழக்கு மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அரபிக் கடலை ஒட்டிய பகுதிகளில் பருவமழை பெய்யத் தொடங்கும்!

இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் 70 சதவீதம் அளவிற்கு மழை பெய்யும் என்பதால் விவசாயம் நல்ல முறையில் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 முதல் 5 நாட்களில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தெற்கு பெனின்சுலா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது !

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அதே நேரம் தில்லியில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை தில்லியில் அதிகபட்ச வெப்ப நிலை 46 டிகிரி செல்ஷியசாக இருக்கும். பின்னர் இது படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img