புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகலரயில்பாதை சேவை தொடங்கியது.
காரைக்குடி திருவாருர் அகல ரயில்பாதை மொத்தம் 160 கி.மீ துாரமுள்ளது.இதில் மொத்தம் 74 ரயில்வே கேட்டுகள் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு காரைக்குடி திருவாருர் மீட்டர்கேஜ் சேவை நிறுத்தப்படடு பணிகள் தொடங்கி பணிகள் முடிந்த நிலையில் கடந்த வருடம் ஜீலை மாதம் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை பணி முடிந்ததால் சேவை தொடங்கியது.பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து திருவாருர் பணிகள் முடிந்த நிலையில் இன்று காலை எம்பி செல்வராஜ் ரயில்சேவையை தொடங்கிவைத்தார்.
கடந்த 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியதால் காரைக்குடியில் இருந்து திருவாருர் வரை உள்ள ரயில்வே பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.காலை 8.15க்கு புறப்பட்ட ரயில் மதியம் 2.15க்கு காரைக்குடி அடையவேண்டும் ஆனால் அறந்தாங்கி நகருக்கே 4 மணிக்கு வந்த காரைக்குடியை தாமதமாக சென்று அடைந்தது. மொத்தம் 74 ரயில்வே கேட்டுகளில் 14 கேட்டுகளில் மட்டுமே பணியாளர் உள்ளதால் மற்ற கேட்டுகளில் ரயிலில் வரும் ரயில்வே ஊழியர் கேட்டை திறந்து மூடி ரயில்வே சேவை நடைபெறுவதால் பயணிகள் மிக தாமதாக பயணத்தை தொடர்ந்தனர்
மேலும் அனைத்து ரயில்வே கேட்டுகளிலும் பணியாளர் நியமனம் செய்து கடந்த 7 வருடமாக காத்திருந்த பயணிகள் மேலும் விரைந்து பயணத்தை தொடர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



