மாணவர்களிடம் பாலியல் சீண்டல்; மதரசா ஆசிரியர் கைது!

Published:

madarsa teacher - 2026

கேரளத்தில் மதரசாவில் பயிலும் மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதரசா ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், ஆலுவா மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதான யூசுப் என்பவர், கோட்டயம் மாவட்டம்  தலயோபரம்பில் உள்ள மசூதி ஒன்றின் சார்பில் நடத்தப்படும் மதரசா பள்ளியில் ஆசிரியராக  இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த மதரசாவில் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கே உள்ள 12 வயது மாணவர் ஒருவர் யூசுப் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றொரிடம் புகார் தெரிவித்துள்ளான்.

இதை அடுத்து பெற்றோரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் யூசுப்பிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த இரண்டு ஆண்டாக, 19 மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து யூசுப்பை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் கேரளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியத்தின் ஷைஸ்டா அம்பர் என்பவர் கருத்து தெரிவித்த போது, இஸ்லாமிய தண்டனைச் சட்டப்படி, இது போன்ற பலாத்கார வழக்குகளில் குற்றவாளியை பலர் முன்னிலையில் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் இவ்வாறு தவறு செய்தால் தண்டனை மிகக் கடுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாமிய தண்டனை சட்டத்தில் கூறப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

இதை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப் பட்டு வருகிறது.

Related articles

Recent articles

spot_img