பல்வேறு குற்றச்சாட்டில் உள்ள 12 பேரை வேலை நீக்கம் செய்து உத்தரவு;   மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…..!

இந்தியா பொது தகவல்கள்

IN - 2026

நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் அமோக வெற்றி பெற்ற பின்னர் மத்தியில் உள்ள அமைச்சரவையிலும் சரி, ஊழியர்கள் மத்தியிலும் சரி எங்கே எப்போது என்ன நடக்கிறது? என்றும் ஒன்றும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

அப்படி தான் இப்பவும் நடந்திருக்கு. அதிகப்படியான லஞ்சம் வாங்கினவங்க, மிரட்டி பணம் வாங்கினவங்க, மற்றும் பாலியல் ரீதியா குற்றம் சாட்டப்பட்டவர்கள் என ஒரு லிஸ்டை தரம் பிரித்து அதில் 12 பேரை வேலையை விட்டு நீக்கியதோடு வீட்டுக்கு வழியனுப்பி வைத்திருக்கிறது மத்திய அரசு.

இந்த நிலையில் நிதியமைச்சகத்தின் விதி எண் 56ன் கீழ் மூத்த அதிகாரிகள் சிலருக்கு நிதி அமைச்சகம் சார்பில் கட்டாய ஓய்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாம்.

இந்த லிஸ்டில் வருமானவரித்துறை தலைமை ஆணையர், முதன்மை ஆணையர்கள், மற்றும் ஆணையர்களை என மொத்தம் 12 வருமான வரித்துறை மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் வருமான வரித்துறை இணைய ஆணையர் அசோக் அகர்வால், கமிஷ்னர் ஸ்ரீ வாஸ்தவா, அதோடு ஐ.ஆர்.எஸ் 1985 பேட்ச் ராஜேந்திர பிரசாத், அஜய் குமார் சிங், ஆர். அருளப்பா, அலோக் குமார் மித்ரா, சந்தர் சாயினி பார்தி, ரவீந்தர், விவேக் பாத்ரா, ஸ்வேதாப் சுமன் மற்றும் ராம் குமார் பார்கவா உள்ளிட்டோர் இந்த பட்டியியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் இந்திய வருவாய் துறையில் இணைய ஆணையர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் இரு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அந்த இரு பெண்கள் இருவரும் புகார் கொடுத்ததன் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவே மற்றொரு அதிகாரி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அவரின் பெயரிலும் குடுமப்த்தினர் பெயரிலும் பல கோடி மதிப்பில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

இவ்வாறு இடை நீக்கம் செய்யப்பட்டவர் ஒவ்வொரு வரும் ஏதாவது ஒரு மோசடியில் ஈடுபட்டதாக கூறி பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.