தர்கா எதிரில் மரணித்த பிச்சைக்கார ‘லட்சாதிபதி’! பையில் இருந்த பணத்தைப் பார்த்து வாய்பிளந்த பொதுமக்கள்!

Published:

mosque begger - 2026

தர்கா எதிரில் மரணித்த பிச்சைக்காரரின் பையை சோதித்த போது, அவரது பையில் லட்சக்கணக்கில் பணம் இருந்தது கண்டு போலீஸாரும் பொதுமக்களும் ஆச்சரியப் பட்டனர்.

நடிகர் கமலஹாசனின் புஷ்பக விமானம் சினிமா போலவே உள்ளது இந்தச் சம்பவம் என்று ஆச்சரியத்தில் பலரும் வாய்பிளந்தனர்!

ஆந்திர மாநிலத்தில் அனந்தபுர் மாவட்டத்தில் புகழ் பெற்றதாக விளங்குகிறது மஸ்தான் வலி தர்கா. இங்கே,  தர்கா எதிரில் ஷேக் பஷீர் என்பவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக பிச்சை எடுத்து வந்தார்.

சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மரணித்தபோது உள்ளூர் மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் வந்து உடலை கைப்பற்றிய போது அவருடைய பையையும் சோதித்துப் பார்த்தனர்.

அதில் மூன்று லட்சத்திற்கு மேல் பணம் இருப்பதை பார்த்து அனைவரும் வியந்தனர். 3.23லட்சம் ரூபாய்.

தர்காவைச் சேர்ந்த அன்பர் ஒருவர், தங்களது தர்காவுக்கு வெளியே ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரது தகவலை அடுத்து, அங்கே வந்த போலீஸார், அந்த நபரின் பையை முதலில் சோதனை இட்டனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அவரது பையில் அவர் குறித்த அடையாளங்கள் ஏதும் இருக்கிறதா என்று சோதிப்பதற்காக போலீஸார் முயன்றனர். ஆனால் அவர் குறித்த எந்த அடையாள அட்டையும் சான்றும் கிடைக்கவில்லை,. மாறாக் ரூ.3.22,676 ரூபாய் கிடைத்துள்ளது.

இது குறித்து வட்டார ஆய்வாளர் அனில் குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ண ரெட்டி ஆகியோர் செய்தியாளரிடம் கூறியுள்ளனர்.

பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்குக்கு அனுப்பப் பட்டது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img