மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு….!

ANBUMANI RAMADAS 3 - 2026

டெல்லி மேல்சபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு
சான்றிதழ் பெறும் அன்புமணி ராமதாஸ்

பாராளுமன்ற மேல் சபையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேர் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

6 பாராளுமன்ற மேல் சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும்.

அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோரும், அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாசும் மனுத்தாக்கல் செய்தனர்.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

தி.மு.க. வேட்பாளர்களாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும், கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோவும் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, அதிமுகவின் முகமது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி, திமுகவின் வில்சன், சண்முகம், மதிமுகவின் வைகோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என சட்டப் பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories