விட்டுச் சென்று விடுவாளோ என்று காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்

kaithu e1563169848461 - 2026மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் குஷி பரிகார் என்று தெரியவந்தது.

ஜெக்தீத் என்பவர் குஷியை தத்தெடுத்து வளர்த்து வந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டே மாடலாகவும் இருக்கிறார் குஷி. ரேம்ப் ஷோக்களிலும் பங்கேற்றிருக்கிறார், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆகவும் இருக்கிறார்.வீட்டை விட்டு வெளியேறி தன் காதலன் அஷ்ரப் ஷேக்குடன் கிட்டிகாதன் பகுதியில் வசித்து வந்திருக்கிறார் 20 வயதான குஷி..

குஷியின் கொலையில் அவரது காதலன் அஷ்ரப் ஷேக்கிற்கு சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அஷ்ரப் ஷேகை காவல் துறையினர் விசாரித்தனர். முதலில் மறுத்த அவன், பின் முன்னுக்குப் பின் முரணாக பேசியதில் காவல்துறையினருக்கு சந்தேகம் அதிகரித்ததுdeadbody - 2026தங்கள் பாணியில் அவரை விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தன்னுடன் லிவ் இன் வாழ்க்கை நடத்தினாலும் குஷியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. பார்ட்டிக்கு செல்வதில் தொடங்கி, செல்போனில் சாட்டிங் செய்வது வரை அவளது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

வெள்ளிக்கிழமை இரவு வீக் எண்ட் பார்ட்டிக்கு போனோம். இருவரும் மது அருந்தினோம். அவள் பிற ஆண்களுடன் பேசியதை கண்டதும் எனக்கு கோபம் வந்தது. காரில் வரும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எனக்கு கோபம் வரவே, காரில் இருந்த மண்வெட்டி வைத்து முகத்தில் வெட்டி கொலை செய்தேன். உடலை சாலை ஓர புதரில் வீசி விட்டு சென்றேன் என்று கூறினான்.

ஜூலை 12ஆம் தேதி நள்ளிரவில் இந்த கொலை நடந்துள்ளது. நாக்பூர் புறநகர் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அஷ்ரப் ஷேக் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.