ரிச்சா பாரதி விவகாரம்..! வெளிச்சத்துக்கு வந்த இஸ்லாமிய போலீஸ் அதிகாரியின் ‘சதி’! இதுபோல் எத்தனையோ?!

ரிச்சா பாரதி மீது ‘ஒரு’ புகார்! ஆனால்... ஒரே ஆள்... நூறு கையெழுத்து! மோசடிக்கு மயங்கிய நீதிபதி!

ரிச்சா பாரதி மீது ‘ஒரு’ புகார்! ஆனால்… ஒரே ஆள்… நூறு கையெழுத்து! மோசடிக்கு மயங்கிய நீதிபதி!

ரிச்சா பாரதி என்ற கல்லூரி மாணவி, தனது பேஸ்புக் பக்கத்தில் எவ்வளவுதான் கொலை செய்யப்பட்டாலும், விரட்டி அடிக்கப்பட்டாலும் ஏன் காஷ்மீரத்து பிராமணர்கள் பயங்கரவாதிகள் ஆகவில்லை என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்!

அதற்காக ஒரு வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு, நாடே பெரும் பரபரப்புக்கு உள்ளானது. காரணம் நீதிபதி வழங்கிய தீர்ப்பு! பிணை வழங்க வேண்டுமானால், 5 குர்ஆன் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும் என்று நீதிபதி, இஸ்லாமிய மதத்துக்காக பிளாக் மெயில் செய்தது, நீதிமன்ற வழக்கறிஞர்களையே முகம் சுளிக்க வைத்து, போராடத் தூண்டியது.

வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பும், நீதிபதிப் புறக்கணிப்பும் செய்தனர். அதன் பின்னர் எழுந்த பதற்ற நிலையை தணிக்க, பிணை வழங்க தாம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றான குர்ஆன் விநியோக தண்டனையை விலக்கிக் கொண்டார் நீதிபதி.

இந்நிலையில், ஒரிசாவை சேர்ந்த ஓர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அருண் உபாத்யாய் இந்த வழக்கு விவகாரத்தைக் குறித்து தெளிவாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இதில்,
1. புகார் மனு கொடுத்தது போல், எந்த ஒரு முஸ்லிம் குழுவும் இல்லை என்றும், இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ள 90க்கும் அதிகமான பேர்களில், அனைத்து கையெழுத்தும் ஒருவரே இட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

  1. கையெழுத்திட்டதாக சொல்லப்பட்ட எவரும் நேரில் வந்து, தாம்தான் அதில் புகார்தாரர் என்று பொறுப்பேற்கவில்லை என்று கூறியுள்ளார்.

  2. பேஸ்புக்கில் ரிச்சா பாரதி வெளியிட்ட கருத்து, எந்த விதத்திலும் குரானையோ முஸ்லிம் மதத்தையோ இழிவுபடுத்தவில்லை; அப்படி எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

(4) காவல் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி மட்டுமே வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட முடியும். ஆனால் இங்கே துணை அதிகாரியான ஒரு முஸ்லிம் அதிகாரி, தாமாகவே வழக்குப் பதிவு செய்து எந்த அதிகாரமும் இல்லாமல் தாமாகவே விசாரணையை மேற்கொண்டுள்ளார். எனில், தாமே அந்த மனுவை உருவாக்கிக் கொண்டாரா?

(5) எந்தவொரு சட்டப் பிரிவின் கீழும், குர்ஆனை விநியோகிக்க உத்தரவிடும் அதிகாரம் மாஜிஸ்திரேட்டுக்கு இல்லை.

(6) ஒரு காஃபிரால் குர்ஆனை விநியோகிக்க உத்தரவிடுவது, குர்ஆனை அவமதிப்பது ஆகும். அந்த வகையில், மாஜிஸ்திரேட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

(7) சட்டத்தை முழுமையாக அறியாததால், நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

சட்டம் தெரியாமல் நீதிபதி தவறான தீர்ப்பு வழங்கியதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார் இவர். இந்த வகையில், ஒரு முஸ்லிம் போலிஸ் அதிகாரி, தமக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு, போலியாக ஒரு மனுவைத் தயாரித்து, வேண்டுமென்றே சதி செய்து, ஒரு பெண்ணை சிறையில் அடைக்கக் காரணமாகி இருக்கிறார்.

இது போல் அதிகாரத்தில் உள்ள எத்தனையோ இஸ்லாமிய, கிறிஸ்துவ, க்ரிப்டோ கிறிஸ்துவ போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர், தங்கள் மதத்தை இந்திய அரசு சர்வீஸ் பணிகளில் புகுத்தி, பெரும்பான்மை இந்துக்களுக்கு துரோகமும் கொடுமையும் இழைக்கின்றனர்; இவர்களில் நேர்மையாளர்கள் வெகுசிலரே! என்று சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரத்தை வெளிப்படுத்தி கருத்திடுகின்றனர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...