இன்ஸ்டாகிராம் மூலம் கணக்குகளை ஹேக் செய்யலாம் ! கண்டுபிடித்த இளைஞர் ! பணப்பரிசால் பாராட்டு !

அடடே... அப்படியா? ஆலோசனைகள் சற்றுமுன் சுய முன்னேற்றம்

instagram - 2026லக்ஷ்மண் முத்தையா இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை அவர் கண்டுபிடித்துள்ளார்.சென்னையை சேர்ந்த  இவர் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.lakshmn muthaya - 2026இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பயனாளர்களின் கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய முடியும் என்பதை அவர் கண்டுபிடித்துள்ளார். இதனை பயனாளர் தனது பாஸ்வேர்டு மாற்றும் வசதியை வைத்து செய்ய முடியும் என கண்டுபிடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பயனாளர் தனது பாஸ்வேர்டு மாற்றுவதற்கு தேவைப்படும் ரிக்வரி கோட் மூலம் அவரது கணக்கை ஹேக் செயலாம் என்பதை லக்ஷ்மண் முத்தையா செய்து காட்டியுள்ளார்.

இதனையடுத்து இவர் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தத் தகவலை அனுப்பியுள்ளார். இதனை ஆராய்ந்த ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் தளத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தப் பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முத்தையாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு 30ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக அளித்துள்ளனர்.  இது இந்திய தொகைப்படி  20.56 லட்சம் ஆகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.