அத்திவரதரை தரிசிக்க மோடி வருவதாக தகவல்கள் உண்மையல்ல என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வரும் 23,24 -ம் தேதி அத்திவரதரை தரிசிக்க மோடி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், வரும் 23,24 -ம் தேதி அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்துக்கு வரலாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.




