நடிப்புத் திறமை, உடல்வாகு இருந்தால் வாய்ப்பு ! நடிகை இந்தூஜா!

Published:

Induja - 2026மேயாத மான் படத்தில் அறிமுகமாகி, தற்போது விஜய் உடன், பிகில் படத்தில் நடித்து வரும் இந்துஜாவின் காட்டில், அடைமழை பொழிகிறது. அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாவதால், உற்சாகமாக இருக்கிறார் அவர்.

மேயாத மான்’ படத்தில் நடிகர் வைபவுக்கு, தங்கையாக நடித்திருந்தவர் நடிகை இந்துஜா. தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய நாட்களிலேயே, தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் அடுக்கடுக்காக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை இந்துஜா.

மேயாதமான் படத்தை தொடர்ந்து, ‘மெர்குரி’, ‘பில்லா பாண்டி’, ‘பூமராங்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.  தற்போது விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தில் புட்பால் டீம்மின் கேப்டனாக இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்துஜா, ‘சூப்பர் டூப்பர்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இயக்குனர் ஏ.கே இயக்கும் படத்தில், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் துருவா கதாநாயகனாக நடித்துள்ளார்.indhuja 3 - 2026அதிரடி காட்சிகளில் நடிக்கும் பெண் என  இரட்டை வேடங்களில் நடித்து, தன்னுடைய நடிப்பின் பரிமாணத்தை வித்தியாசப் படுத்தி காட்டியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.

பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  இந்தப் படத்துக்கு சுந்தர்ராம் ஒளிப்பதிவு. திவாகர் தியாகராஜன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

”குறும்படங்களுக்கும், சினிமாவுக்கும், நேரம் மட்டுமே வித்தியாசம்; மற்றபடி, இரண்டும் ஒன்று தான். ஒரே மாதிரியான உழைப்பு தான் தேவைப்படுகிறது மற்ற மாநிலத்தவரை காட்டிலும், தமிழ் பேசுபவர்களுக்கு, தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைவு என்ற நிலை, ஏற்கனவே இருந்தது உண்மை தான். இப்போது நிலைமை மாறி விட்டது. திறமை, நடிப்புக்கேற்ற உடல்வாகு இருந்தால், நிச்சயம், நம்மைத் தேடி வாய்ப்பு வரும்.

மொழி பேதம் பார்ப்பது இல்லை. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது,” என்கிறார், இந்துஜா.”எனக்கு, நடிப்பை தவிர, பிரியாணி நன்றாக சமைக்கவும், சாப்பிடவும் தெரியும். நடனமும் நன்றாக ஆடுவேன். பிகில் படம் பற்றி, இப்போது எதுவும் கூற முடியாது,” என்கிறார்.

Related articles

Recent articles

spot_img