காஷ்மீர்; மத்திய அரசின் முடிவு: வரவேற்பு தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர்!

Published:

rss welcomes centre decision - 2026

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப் பட்டதற்கும், காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப் பட்டு, லடாக், காஷ்மீர் பிரதேசங்கள் யூனியன் பிரதேசங்களாக அமைக்கப் படுவதற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.,

இது குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவர் மோகன் ஜி பாகவத், மற்றும், செயலாளர் பையாஜி ஜோஷி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்…

அரசின் இந்த தைரியமான செயலைப் பாராட்டுகிறோம். இந்தச் செயலானது ஜம்முகாஷ்மீருக்கு மட்டும் மிகத் தேவையான ஒன்று அல்ல, நாட்டுக்கே தேவையானது. இதனை அனைவரும் வரவேற்க வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல் சச்சரவுகளைக் கடந்து, அனைவரும் இதற்கு தங்கள் ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இது குறித்த டிவிட்டர் பதிவு:

இதே போல், ஸ்ரீ நரேந்த்ர மோதி சிந்தனை பேரவையின் (நரேந்த்ர மோதி விசார் மஞ்ச்) அகில பாரத பொதுச் செயலாளர் ராம்கோபாலரத்னம் மற்றும் தமிழக பொதுச் செயலாளர் ஸ்ரீ ஶங்கர்கோபால் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்..

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

மோதியின் மத்திய அரசு இன்று ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் எடுத்த மிக முக்கியமான முடிவை நாம் வரவேற்கிறோம் . இத்தனை வருடங்களாக பெருமூச்சுக்கள், கண்ணீர்த்துளிகள், கனவு, ஆவேசமான பேச்சுக்கள், போராட்டங்கள், மூவர்ணக்கொடியை ஏற்றவும் போராட்டங்கள், விலை மதிக்க முடியாத நம் ராணுவ வீரர்களின் ரத்த வெள்ளம்  என நீண்ட போராட்டங்கள்…எல்லாவற்றுக்கும் விடை காண்பது போல்… இன்று இந்த முடிவு நம் அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது!

ஆண்டுதோறும் 70,000 கோடி ரூபாய் கொடுத்தும் வளர்ச்சி காணாத காஷ்மீர் , தினம் தினம் காதைப் பிளக்கும் குண்டு வெடிப்பு , நெஞ்சைப் பிழியும் மரண ஓலங்கள் , கோடிகோடியில் பணத்தைக் குவித்து மக்களை ஏமாற்றி வந்த குடும்ப / வாரிசு அரசியல்வாதிகள் .. ஒரேயடியாக அனைத்தையும் மாற்றக் கூடிய ஒரு மகத்தான முடிவு .. நம் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி!

370 சட்டத்தை நீக்கியதன் மூலம் பெண் உரிமை .. மகளிர் சமத்துவம் என்ற திசையில் மிக முக்கியமான முடிவு .. இந்தச் சட்டம் காஷ்மீரப் பெண்கள் தம் பெற்றோர் சொத்தில் பங்கு பெறுவதை மறுத்தது .. இன்று அவர்களது இந்த உரிமை மீட்கப் படுகிறது .. முத்தலாக் சட்டத்திற்குப் பின் இதுவும் பெண்-சமத்வத்திற்கு அடிகோலும் மகத்தான சட்டம்!

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

ஆஸேது – ஹிமாசலம் , ஹிமயம் முதல் குமரி வரை , காஷ்மீர் முதல் கன்யாகுமரி என்றெல்லாம் இந்நாள் வரை கவிதை பாடினோம்! ஆனால் காஷ்மீரம் பாரதத்துடன் இணையாமல் இருந்தது! இன்று பாரதம் ஒரு தேசம் என்ற சத்யத்தை ஆணித்தரமாக வலியுறுத்தும் ஒரு முடிவு இது! நம்மில் எவரும் காஷ்மீரில் வசிக்க முடியும் , வீடு வாங்க முடியும் , தொழில் நிறுவ முடியும் .. வியாபாரம் செய்ய முடியும் .. நமது அளப்பறியா ஆனந்தத்தை நாம் வெளிப்படுத்துகிறோம் !

இனி காஷ்மீரமும் வளர்ச்சி அடையும் .. வளர்ச்சியின் பலனான வளம் பொதுமக்களைச் சென்றடையும்!

கண்களில் கனவுடனும் மனதில் நிராசையும் ஏக்கமும் ஏந்தி வாழ்ந்த காஷ்மீர இளைஞர்களும் இனி பாரத தேசத்தின் வளர்ச்சியில் பங்களிக்க முடியும்!

முஸ்லிம் என்ற பெயரில் பிரித்து வைத்து நடந்து வந்த அரசியலும் இனி முடிந்து போகும்!  இதில் கொழித்த அரசியல்வாதிகளும் முடிந்து போவர் .. வாக்தேவி சரஸ்வதியின் காஷ்மீர் , பரமசிவனின் வசிப்பிடமான இமயமலை பள்ளத்தாக்கான காஷ்மீர் , காஶ்யப ரிஷியின் காஷ்மீர், ஆதி சங்கரன் கால் பட்ட காஷ்மீர் , பாரதத்தை உறுதியாக ஒருங்கிணைத்த சாணக்யன் பணி புரிந்த தட்சசீலம் உள்ள காஷ்மீர் ,.. தனது பழம் பெருமையை மீண்டும் பெற்றிடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்!

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இந்த நேரத்தில் மோதி அரசாங்கம் இதைச்செய்யும் என்ற நம்பிக்கையுடன் இணைந்த எங்களது ஒரு விண்ணப்பமும் வைக்கிறோம் .. பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீரப் பகுதியையும் பாரதத்துடன் இணைப்பதற்கான திட்டம் வரையப்பட வேண்டும் .. எங்களது ஆசை இது , எங்களது கனவு இது , எங்களது நம்பிக்கை இது , எங்களது கோரிக்கை இதுவே .. .என்று குறிப்பிட்டுள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img