நண்பன் என்று நம்பி ஏமாந்த பள்ளி மாணவி! வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு வன்கொடுமை!

Published:

vankodumai 1 - 2026

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைப் பகுதியில் 9-ம் வகுப்பு படித்துவரும் 16 வயது பள்ளி மாணவி. இவருக்கு ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி என்பவரின் மகன் விஷ்வா (21) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நட்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட விஷ்வா, மாணவியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தனது செல்போனில் படம் பிடித்துக்கொண்ட விஷ்வா, தொடர்ந்து அதைக் காட்டி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

whatsapp - 2026

மாணவியிடம், `நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் எல்லோருக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிவிடுவேன்’ என்று மிரட்டி தொடர்ந்து மாணவிக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இந்நிலையில் அவன் எடுத்த வீடியோவையும் தன் நண்பர்களுக்கு வாட்சப் மூலம் அனுப்பியுள்ளான்.

wtap 2 - 2026

இதைப் பயன்படுத்திக்கொண்ட விஷ்வாவின் நண்பர்கள் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் மாணவியின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவர, மாணவி நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

wtap 1 - 2026

இதன் அடிப்படையில் மானாமதுரை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவியை வீடியோவைக் காட்டி, பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது தெரியவந்தது. இதை அடுத்து முக்கிய குற்றவாளிகளான விஷ்வா, அவரின் நண்பர்களான கவியசரன், ஆகாஷ், அருண் ஆகிய 4 இளைஞர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

wtap - 2026

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img