முகநூல் அறிமுகம்! காதலன் தூக்கில்! ஆசிரியை கர்ப்பம்!

Published:

03 July11 Facebook - 2026

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் என்ற பகுதியை சேர்ந்த 31 வயது ஆசிரியை ஒருவர் பேஸ்புக் மூலம் விஜய்சங்கர் என்பவரை காதலித்தார்

இருவரும் சில மாதங்கள் பார்க்காமலே காதலித்து அதன் பின் ஒரு கட்டத்தில் நேரில் சந்தித்துக் கொண்டனர் இதனை அடுத்து அந்த பெண் கர்ப்பம் அடைந்தார்

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது

love - 2026

ஒரு கட்டத்தில் கர்ப்பமான காதலியால் தனக்கு பிரச்சனை வரும் என்று முடிவு செய்த விஜய்சங்கர், காதலியை கொலை செய்ய முடிவு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

knife - 2026

அவரிடமிருந்து வெட்டு காயத்துடன் தப்பி ஓடிய அந்த பெண் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துணையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வீட்டின் கதவை தட்டி விஜய் ஷங்கரை வெளியே வருமாறு கூறினர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்தபோது விஜய்சந்தர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தார்

thukku1 1 - 2026

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால் காதலி கர்ப்பமாகியும், காதலன் பிணமாக தொங்கிய காட்சி அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

Related articles

Recent articles

spot_img