ராஜீவ்காந்தியை நாங்கதான் கொன்றோம்..! ‘பிரிவினைவாதி’ சீமான் மீது வழக்குகள் பதிவு!

சற்றுமுன் சென்னை நெல்லை
seeman e1538589747761 - 2026

வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாங்குநேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது காங்கிரஸ் போலீசில் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து விக்கிரவாண்டி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விக்கிரவாண்டியில் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்குகள் பல பதிவு செய்யப் பட்டாலும், சீமான் மீது இதுவரை தமிழக அரசு எந்த வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக, ராஜீவ் காந்தி குறித்த சீமானின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார். மேலும், ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டிருந்தார்.

https://twitter.com/tiger_tamilan/status/1183357988058193921

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.