
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், ரஜினி தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது குறித்து கேட்கிறீர்கள்.
திருவள்ளுவர் #நாத்திகரல்ல ஆத்திகர் யாரும் மறுக்க முடியாது. பாஜக அவர்களது டிவிட்டர் கணக்கில் காவி உடை அணிந்து, பட்டை பூசிய படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
அது #அவர்களது விருப்பம், ஆனால் தெருவெங்கும் இருக்கும் வள்ளுவர் சிலைக்கு அப்படி செய்யச் #சொல்லவில்லை.
எனவே நாட்டில் பல பிரச்சனை இருக்கும் போது இதையெல்லாம் ஒரு விஷயமாக எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
எனக்கு ஐகானிக் விருது அறிவித்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி. பொன்.ராதா கிருஷ்ணன் என்னிடம் பாஜகவில் சேருவதற்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
எப்படி திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினார்களோ! அதே போல எனக்கும் பாஜக சாயம் பூசப் பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் சிக்க மாட்டார் நானும் சிக்கமாட்டேன் என்றார் ரஜினி காந்த்!