
+2 படிக்கும் மாணவியை செல்போனில் படம் எடுத்த இளைஞருக்கு செருப்பால் பதில் சொன்ன மாணவி
தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டம் பழைய ராஜ பேட்டையை சேர்ந்த மாணவி சந்தியா . இவர் அப்பகுதியை சேர்ந்த பள்ளியில் +2 படிப்பதற்காக ஆட்டோவில் பயணம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவன், மாணவியை இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டே செல்போனில் புகைப்படம் எடுத்தார். இதனைக்கண்ட மாணவி சந்தியா மற்றும் ஆட்டோவில் இருந்த சக பயணிகள் அதை அடுத்துள்ள ஊரில் வசிக்கும் மக்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதன்மூலம் பைக்கில் சென்ற இளைஞனை ஊர் மக்கள் வழிமறித்து, அப்பெண்ணை வைத்து செருப்பால் அடிக்க வைத்தனர்
இதுகுறித்து காமா ரெட்டி போலீசார் இளைஞரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.