ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்! அவர், அப்போது கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அந்தக் கலந்துரையாடலின் போது, ராஜிவ் கொலை தொடர்பாக மாணவிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராகுல், எனக்கு யார் மீதும் எந்த கோபமோ அல்லது வெறுப்போ இல்லை. அவர்களை நான் மன்னித்து விட்டேன். நான் எனது தந்தையை இழந்து விட்டேன். அது எனக்கு மிகவும் கடினமான நேரம். எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்து இப்போது சமூகத் தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் பேசியவை…
பின்னர் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்… புதுச்சேரிக்கு வெளியே இருந்து வந்தவர்களுக்கு, மாநிலம் எப்போதும் சொந்தமாகாது. கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரி அரசை மோடி செயல்பட விடவில்லை. நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி, புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. மத்திய அரசு கொடுத்த தைரியத்தினால் தான் கிரண்பேடி அதிகாரத்தை கையில் எடுத்தார். புதுச்சேரி மக்களை காப்பாற்ற தர்ம யுத்தத்தில் ஈடுபட உள்ளேன். எங்களுக்கு தரும் ஓட்டு, புதுச்சேரி மக்களின் கனவுகளை நிறைவேற்றும். என்னை போன்ற மக்கள் பிரதிநிதிகளை பார்லிமென்டில் பேச அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் தமிழ் பேச அனுமதிப்பதில்லை. அரசை எதிர்த்து பேசினால், தீவிரவாதி என்கிறார்கள் .. என்று பேசினார்.
அவருடைய பேச்சுக்கு பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. புதுச்சேரிக்கு வெளியே இருந்து வந்தவர்களுக்கு மாநிலம் சொந்தமாகாது என்றால், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு இந்தியா எப்படி சொந்தமாகும் என்று, சோனியாவையும் ராகுலையும் குறிவைத்து விமர்சனங்களை எழுப்புகின்றனர் சிலர்.
துணைநிலை ஆளுநர் புதுச்சேரியை சார்ந்தவரா? அவர் இங்கு தான் வளர்ந்தாரா? அல்லது இங்கு தான் பிறந்தாரா? உங்கள் பாரம்பரியத்தை அறிந்தவரா? எந்த அடிப்படையில் இந்த இடத்தில் ஆளுமை செய்ய விரும்புகிறார்? உங்களுக்காக முடிவெடுக்க கூடிய உரிமையை கொடுத்தது யார்? : ராகுல் காந்தி கிரண் பேடி குறித்து.
சோனியா காந்தி ‘இந்தியாவை’ சார்ந்தவரா? அவர் இங்கு தான் வளர்ந்தாரா? அல்லது இங்கு தான் பிறந்தாரா? நம் பாரம்பரியத்தை அறிந்தவரா? எந்த அடிப்படையில் இந்த இடத்தில் ஆளுமை செய்ய விரும்பினார்? மக்களுக்காக முடிவெடுக்கும் உரிமையை துணை நிலை ஆளுநருக்கு கொடுத்தது இந்திய அரசியல் சாசனம் என்பது இந்தியர்களுக்கு தெரியும்.
நாராயணன் திருப்பதி. ( பாஜக., செய்தி தொடர்பாளர்)
ராகுலை வைத்துக் கொண்டு மொழிபெயர்ப்பில் தனது ஆசைகளை எல்லாம் உள்புகுத்தி சொன்ன தங்கபாலு ஏற்கெனவே பலத்த விமர்சனங்களுக்கும் கேலி கிண்டலுக்கும் உள்ளானார். இப்போது, அதே வகையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் நாராயணசாமி.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஒரு பெண்மணி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார். புயல் நேரத்தில் எங்களை வந்து முதல்வர் பார்க்கவில்லை, எந்த உதவியும் செய்யவில்லை என்று ஒரு பெண்மணி புகார் கூற… நாராயணசாமியோ… அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ராகுலிடம் கூறும்போது.. தாம் புயல் நேரத்தில் அவர்களைப் போய்ப் பார்த்ததை அந்தப் பெண் சொல்கிறாள் என்று மாற்றிச் சொன்னார். இதுவும் இப்போது சோஷியல் மிடீயா மீம் என சுற்றி வருகிறது.
அந்த வீடியோ பதிவு….
“தூண்டில் வளைவு” என்றால் ஒருவகை மீன்பிடிக்கும் வலையாம் – பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி.. கூறுகிறார் என்று அடுத்த கிண்டல்கள் உலாவருகின்றன.
இது குறித்த உரையாடல்…
தூண்டில் வளைவை மத்திய அரசு தடை வேற செய்து இருக்கிறதாம். ஐந்து வருடம் ஒரு மாநிலத்தை ஆண்ட முதல்வர் இதை கூறுகிறார்…
அந்தப் பெண் எவ்வளவு அழகாக எடுத்துக் கூறுகிறார் தூண்டில் வளைவு என்றால் என்ன என்று… அதையெல்லாம் கேட்ட பிறகும் கூட, மீண்டும் கூறுகிறார் தூண்டில் வளைவு என்றால் ஒருவகை வலை என்று..!
எந்த லட்சணத்தில் ஆட்சிபுரிந்து இருப்பார், எந்த லட்சணத்தில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்திருப்பார், எந்த லட்சணத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்…
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக வேற இருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் முன்னேற்றம் தடைபட்டது ஏன் என்று இப்போது புரிகிறதா..? இந்த கோமாளிக் கூட்டங்கள்தான் இன்று மத்திய, மாநில அரசுகளை குறை கூறிக்கொண்டே அலைகின்றது…
மீனவர்களுக்கு தூண்டில் வளைவு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மாநில அரசின் முதல் கடமை என்பது கூட தெரியாமல் 5 வருடம் கடற்கரை கொண்ட மாநிலத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார்..!
-என்று நாராயணசாமி இப்போது சமூக ஊடகங்களின் மூலம், வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.
அடுத்து, கிறிஸ்துவ மதபிரசாரக் கூட்டங்களில் மதமாற்ற வியாபாரிகள் சிலரை வைத்துக் கொண்டு நாடகம் நடிக்கவைத்து மக்களை ஏமாற்ற முயற்சி மேற்கொள்வது போல்… இங்கே ஒரு கல்லூரிப் பெண்ணை வைத்து நடத்தப் பட்ட நாடகத்தை வைரலாக்கி வருகின்றனர் சோஷியல் மீடியாக்களில்! அந்த வீடியோ…
அடுத்து, ‘மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் இல்லை’ என்று ராகுல் கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கூடத் தெரியாமல் ராகுல் போன்றவர்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதும், பொதுமக்களிடம் பிரசாரம் செய்வதும் எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் சமூக ஊடகங்களில் !
ராகுலின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ராகுலின் இத்தாலிய இயற்பெயரான கேரோ ரவுல் என்ற பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில்… இத்தாலி நாட்டை விட்டு வெளியில் வர, ராகுல் மறுக்கிறார். அங்கு தான் மீன்வளத்துறைக்கு தனியான இலாகா இல்லை; அது வேளாண் மற்றும் வனத்துறை கொள்கை என்ற அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
நம் அமைச்சரவையைப் பொறுத்தவரை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறையை ஒன்றிணைத்து தனி அமைச்சகத்தை, பிரதமர் நரேந்திர மோடி 2019இல் உருவாக்கினார். அத்துறைக்கு அமைச்சராக நான் பொறுப்பு வகிக்கிறேன். ஒரு கட்சியின் பொறுப்புமிக்க தலைவரான ராகுலுக்கு இந்த விவரம் கூட தெரியாதது ஆச்சரியம் அளிக்கிறது.
விவசாயிகளை அவர் தவறாக வழிநடத்துகிறார். உலக அரங்கில், நம் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.