நெல்லை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ஆசைக்கு இணங்க வலியுறுத்தி, பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடும் சாக்கில், தவறாக வழிநடத்த முயன்றார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன். இது குறித்த புகாரின் பேரில், தலைமறைவான ஜெகநாதனை பீளமேடு போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தனியார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைய முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். இதை அடுத்து அவரை இங்குள்ள வழக்கறிஞர் ஒருவர் தனது பாதுகாப்பில் வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று மது விருந்து நடந்ததாகக் கூறப்படுகிறது. சிவலார்குளம் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கி அவர் மது போதையில் இருந்த போது, கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகின்றது.
இதில் அவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் நள்ளிரவில் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.





