இந்திய உணவுக் கழக அதிகாரியாக நடித்து பல்வேறு மாவட்டங்களில் ஏராளனமர்களிடம் ரூ. 3 கோடிக்கு மேல் மோசடி செய்த சோபியா என்ற பெண்ணை சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கார் மற்றும் பல ஐ.ஏ.எஸ் பெயரில் டைப் செய்யப்பட்ட போலி பணி நியமன ஆணைகள் பறிமுதல் செய்யப் பட்டன.
மேலும் தலைமறைவாக உள்ள அவரது காதலன் முருகதாஸை போலீஸார் தேடி வருகின்றனர்..




