
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது குறித்து கேட்கிறீர்கள்.
“திருவள்ளுவர் ஒரு ஞானி. அவருக்குச் சாதி, மதம் போன்ற எதுவும் இல்லை. ஆனால் அவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தார் என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது. பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விஷயம்.
நாட்டில் உள்ள அனைவரும் திருவள்ளுவருக்குக் காவி நிறம் பூசவேண்டும் என அவர்கள் சொல்லவில்லை. நாட்டு மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில் இதைப் பெரிதாக்குவது சிறுபிள்ளைத் தனமாக உள்ளது.
எனக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது அதற்கு நன்றிகள். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை. பொன். ராதாகிருஷ்ணன் என்னைச் சந்தித்தது மிகவும் சாதாரணமானது, என்னை பா.ஜ.கவில் இணையவேண்டும் என அவர் கூறவில்லை
தமிழகத்தில் காலியாக உள்ள பாஜக தலைவர் பதவிக்கு வர போவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து பேசிய அவர், எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. ஆனா நானும் அவரும் சிக்க மாட்டோம்’ என்றார்.
ரஜினி மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது குறிப்புகளாக பின்வருமாறு,
நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன்.நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும்.இந்திய பொருளாதாரம் மந்தமாகதான் உள்ளது; அதை மீட்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும்