ATM 500 - 2026

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது.அதில் ரூ .200 எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைத்தனர்.

இந்த செய்தி அப்பகுதியில் காட்டு தீ போல பரவ அந்த ஏடிஎம் மையத்திற்கு மக்கள் குவித்தனர்.ஏடிஎம் இயந்திரத்தில் ரூ .200 பட்டனை அழுத்தி ரூ.500 எடுத்து சென்றனர்.

இந்த செய்தியை அறிந்த வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஏடிஎம் மையத்தை பூட்டி வைத்தனர்.

பின்னர்அந்த இயந்திரத்தை பார்க்கும் போது ரூ .200 வைக்கவேண்டிய ரேக்கில் ரூ .200 நோட்டுகளை வைத்தது தெரியவந்தது

.அதனால் தான் ரூ .200 பட்டனை அழுத்தினால் பொதுமக்களுக்கு ரூ.500 கிடைத்தது.

இந்த இழப்பை பணம் வைத்த தனியார் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என வங்கி அதிகாரிகள் கூறினர்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending