
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் உயிர் தியாகம் செய்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், கிருஷ்ணா காதி மண்டலத்தில், இந்திய ராணுவ துருப்புகள், முகாம் அமைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மேலும், எறிகணைகளை வீசியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறியத் தாக்குதலால், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கும் இந்திய ராணுவம், அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு, கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது