சிறுவர்களை கட்டாயப் படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டவருக்கு பொதுமக்கள் தர்ம அடி.!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி
adithadi - 2026

சிறுவர்களை கட்டாய படுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட நபரை பெண்கள் சூழ்ந்து கொண்டு ஒரு ஆண் ஆணுடன் செய்யக்கூடிய செயலா இது என தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாகை அருகே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த நபரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

நாகை அடுத்த மஹா லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். இவர் அதே பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அந்த பகுதியை சேர்ந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

jjp - 2026

இந்நிலையில் இன்று காலை அதே பகு பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை மிரட்டி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

இது அந்த சிறுவனின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் ஜோசப் ராஜை தேடியுள்ளனர்.

criam 1 - 2026

இந்நிலையில் ஜோசப் ராஜ், நாகை அண்ணா சிலை அருகே நின்று கொண்டு இருந்துள்ளார்.

அவரை கண்ட சிறுவனின் உறவினர்கள் குறிப்பாக பெண்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து நாகை வெளிப்பாலையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

jaill - 2026

பின்னர் ஜோஸப் ராஜை விசாரித்த போலிசார், ஜோசப் ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.