எல் கே அத்வானி பிறந்தநாள்! பிரதமர் நேரில் வாழ்த்து!

Published:

modi athvani - 2026

பாஜகவுக்கு வலிமையையும் வடிவத்தையும் அளித்தவர் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானியை அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். அவர் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று (வெள்ளிக்கிழமை) தனது 92-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் உட்பட பலரும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

modi athvani venkaya - 2026

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறுகையில், ‘நமது இந்திய மக்களை மேம்படுத்துவதில் அத்வானி அளித்த சிறப்பான பங்களிப்பை இந்தியா எப்போதும் மதிக்கும்.

modi athvani amithsha - 2026

அத்வானியின் பிறந்த நாளில், அவரது ஆரோக்கியமான வாழ்விற்காக நான் பிரார்த்திக்கிறேன். அத்வானி பல வருடங்களாக உழைத்து பாஜகவுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தவர்.

பல வருடங்களாக நமது கட்சி இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் துருவமாக உருவெடுத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் அத்வானி போன்ற தலைவர்கள்தான்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
modi athvani 1 - 2026

அத்வானியைப் பொறுத்தவரை பொதுச் சேவை என்பது எப்போதும் நியாங்களுடன் தொடர்புடையது. இதனை ஒரு முறை கூட அத்வானி சமரசம் செய்ததில்லை.

அமைச்சராக இருந்தபோது முன்னிலையில் இருந்தார். அவரது நிர்வாகத் திறன்கள் உலக அளவில் பாராட்டப்படுகின்றன’ என்று பதிவிட்டுள்ளார்.

அத்வானி வீட்டிற்கு சென்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.உடன் அமித்ஷா வெங்கையா நாயுடுவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Related articles

Recent articles

spot_img