
அத்வானிக்கு 92 ஆம் பிறந்த நாள் .அவர் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர் வெங்கையா நாயுடு, மோடி, அமித்ஷா ஆகியோர்.
அத்வானி ஒரு ராஜ நீதி நிபுணர் என்று அத்வானிக்கு புகழாரம் சூட்டினார் பிரதமர்- மோடி.
பாரதிய ஜனதா கட்சியின் முதன்மை தலைவர் எல்கே அத்வானி இன்று 92 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இன்று காலை அத்வானி இல்லத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமீத் ஷா பிஜேபி காரிய நிர்வாக தலைவர் ஜேபி நட்டா சென்று வாழ்த்து தெரிவித்து சிறிது நேரம் அமர்ந்து உரையாடினர்.

அத்வானி ஒரு ராஜதந்திரி தீர்க்கதரிசி என்று இந்த சந்தர்ப்பத்தில் மோடி பாராட்டுத் தெரிவித்தார். அவர் ஆயுள் ஆரோக்கியத்தோடு நீண்டகாலம் வாழ பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
நாட்டு மக்கள் வலிமை பெற்று சாதனை புரிவதில் அத்வானி அவர்கள் ஆற்றிய உதவி அசாதாரணமானது என்று குறிப்பிட்டார்.
அத்வானிக்கு பிஜேபி கட்சியினரோடு கூட பல பிரமுகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.



